ஒரு மென் பானம் (soft drinks) தயாரிக்கும் நிறுவனம், இரண்டு குப்பி ஆலைகள் C1 மற்றும் C2 - ஐக் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆலையும் மூன்று விதமான மென் பானங்கள் S1, S2 மற்றும் S3 - ஐத் தயாரிக்கின்றன. இரு ஆலைகளிலும் ஒரு நாளில் தயாரித்து இருப்பு வைக்கப்படும் குப்பிகளின் எண்ணிக்கை, பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு |
ஆலை |
C1 |
C2 |
S1 |
3000 |
1000 |
S2 |
1000 |
1000 |
S3 |
2000 |
6000 |
ஒரு சந்தைக் கணக்கெடுப்பு ஏப்ரல் மாதத்தில் S1 குப்பிகள் 24000மும் S2 குப்பிகள் 16000-ம் S3 குப்பிகள் 48000-ம் தேவைப்படுவதைக் குறிக்கின்றது. ஒரு நாள் P மற்றும் Q ஆலைகள் முறையே செயல்படுபவதற்கான செலவு ரூ 600 மற்றும் ரூ 400 ஆகிறது. ஏப்ரல் மாதம் ஒவ்வொரு அலையும் குறைந்தபட்சத் தயாரிப்புச் செலவில் சந்தைத் தேவையை எதிர்நோக்குவதற்கு எத்தனை நாட்கள் செயல்பட வேண்டும் எனக் காண்க. மேற்கண்டக் கணக்கை. நெரியல் திட்டமிடல் வகையில் அமைக்கவும்.